உலகக்கோப்பை திருவிழா: வங்கதேசத்திற்கு மரண அடி கொடுத்த இங்கிலாந்து
தரம்சாலாவில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
இங்கிலாந்து 364
உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் ஆடிய இங்கிலாந்து 364 ஓட்டங்கள் குவித்தது.
தாவித் மலான் 140 ஓட்டங்களும், ஜோ ரூட் 82 ஓட்டங்களும் விளாசினர். அதனைத் தொடர்ந்து இமாலய இலக்கினை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
தன்ஜித் ஹாசனை 2 பந்துகளில் வெளியேற்றிய டாப்லே, அடுத்து களமிறங்கிய ஷாண்டோவை முதல் பந்திலேயே அவுட் ஆக்கினார்.
அதனைத் தொடர்ந்து வந்த ஷகிப் அல் ஹசன் ஒரு ரன்னில் டாப்லே ஓவரில் போல்டனார். மெஹிதி ஹசன் 8 ஓட்டங்களில் அவுட் ஆக வங்கதேசம் 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் என தடுமாறியது.
Twitter (@BCBtigers)
லித்தன் தாஸ் அரைசதம்
எனினும் தொடக்க வீரர் லித்தன் தாஸ் அதிரடியில் மிரட்டினார். அவருக்கு பக்கபலமாக ரஹிம் ஆடினார். அணியின் ஸ்கோர் 121 ஆக உயர்ந்தபோது தாஸ் 76 (66) ஓட்டங்களில் அவுட் ஆனார்.
பொறுப்புடன் நிதானமாக ஆடிய ரஹிம் 51 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டாப்லே ஓவரில் வெளியேறினார். அடுத்து டௌஹித் ஹ்ரிடோய் 39 ஓட்டங்களில் அவுட் ஆக, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
Twitter (@BCBtigers)
இதனால் வங்கதேச அணி 48.2 ஓவரில் 227 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி படுதோல்வியடைந்தது. இங்கிலாந்து தரப்பில் டாப்லே 4 விக்கெட்டுகளும், வோக்ஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 107 பந்துகளில் 140 ஓட்டங்கள் விளாசிய மலான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |