இந்திய அணியை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து! ருத்ரதாண்டவம் ஆடிய ஜோ ரூட், பேர்ஸ்டோவ்
பர்மிங்காமில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்கிய கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 284 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 132 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 245 ஓட்டங்கள் எடுத்தது.
அதனைத் தொடர்ந்து 378 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அதிரடியாக தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு 107 ஓட்டங்கள் சேர்த்தது. அலெஸ் லீஸ் 56 ஓட்டங்களும், சாக் கிரவ்லே 46 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய போப் ஓட்டங்கள் எடுக்காமல் பும்ரா ஓவரில் வெளியேறினார். அடுத்து கைகோர்த்த ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் ருத்ரதாண்டவம் ஆடினர். இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இருவரையும் சதம் விளாசினர். கடைசிவரை இந்திய அணியின் பந்துவீச்சாளர்களால் இவர்களை ஆட்டமிழக்க செய்ய முடியவில்லை.
So @root66's series stats are an absolute joke! ?
— England Cricket (@englandcricket) July 5, 2022
??????? #ENGvIND ?? pic.twitter.com/jzKru38I85
இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 378 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோ ரூட் 142 ஓட்டங்களும், ஜானி பேர்ஸ்டோவ் 114 ஓட்டங்களும் எடுத்தனர். பேர்ஸ்டோவ் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் ஜூலை 7ஆம் திகதி தொடங்க உள்ளது.
AGAIN!!! ??
— England Cricket (@englandcricket) July 5, 2022
Scorecard/Clips: https://t.co/jKoipFmvoB
??????? #ENGvIND ?? pic.twitter.com/2ep47JN4Og