அயர்லாந்தை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து அணி! அறிமுகப் போட்டியிலேயே தெறிக்கவிட்ட வீரர்
அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாட்டிங்காமில் நடந்தது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 334 ஓட்டங்கள் குவித்தது. வில் ஜேக்ஸ் 88 பந்துகளில் 94 ஓட்டங்கள் விளாசினார். இதில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும்.
Making his mark ?
— England Cricket (@englandcricket) September 23, 2023
8⃣9⃣ on debut from Sam Hain! ?
Match Highlights: https://t.co/kNNuLQjzTT#ENGvIRE | #EnglandCricket pic.twitter.com/EAhiu4Ib6O
அறிமுக வீரர் சாம் ஹேன் 82 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 89 ஓட்டங்கள் குவித்தார். அயர்லாந்தின் டாக்ரெல் 3 விக்கெட்டுகளும், யங் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய அயர்லாந்து அணி, ரெஹான் அகமது மற்றும் ஜார்ஜ் ஸ்கிரிம்ஷா பந்துவீச்சில் ஓட்டங்கள் எடுக்க முதலில் தடுமாறினார்.
எனினும் டாக்ரெல் (43), டெக்டர் (39) ஆகியோர் தங்கள் பங்களிப்பை அளித்தனர். எனினும் மெகர்த்தி, யங் வெற்றிக்காக போராடினர்.
ஆனாலும் 46.4 ஓவரில் 286 ஓட்டங்களுக்கு அயர்லாந்து ஆல்அவுட் ஆனது. மெகர்த்தி 41 ஓட்டங்களும், யங் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களும் எடுத்தனர்.
இங்கிலாந்தின் ரெஹான் அகமது 4 விக்கெட்டுகளும், ஜார்ஜ் 3 விக்கெட்டுகளும், பாட்ஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |