15 ஆண்டுக்கு பின் இமாலய வெற்றி! 267 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை சாய்த்த இங்கிலாந்து
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 267 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து இமாலய வெற்றி பெற்றுள்ளது.
முதல் டெஸ்ட்
நியூசிலாந்தின் Mount Maunganui மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ஓட்டங்களும், நியூசிலாந்து 306 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 374 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 57 ஓட்டங்களும், ஹரி ப்ரூக் 54 ஓட்டங்களும் எடுத்தனர்.
How good was that innings ?
— Spark Sport (@sparknzsport) February 17, 2023
Watch BLACKCAPS v England live and on-demand on Spark Sport #SparkSport #NZvENG pic.twitter.com/O6bbmKTZLH
இமாலய இலக்கு
இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு 394 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இன்று தொடங்கிய கடைசி நாள் ஆட்டத்தில், இங்கிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 126 ஓட்டங்களுக்கு நியூசிலாந்து சுருண்டது.
அதிகபட்சமாக டேர்ல் மிட்செல் 57 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Another day of action at Bay Oval as England take a 98-run lead into Day 3. Catch up on the scores | https://t.co/7ltlnCW1ng https://t.co/3YsfR1YBHU and highlights at @sparknzsport ? #NZvENG pic.twitter.com/bFAJNUAbgw
— BLACKCAPS (@BLACKCAPS) February 17, 2023
15 ஆண்டுக்கு பின் வெற்றி
இதனால் 267 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து இமாலய வெற்றி பெற்றது. நியூசிலாந்து மண்ணில் 2008ஆம் ஆண்டுக்கு பின் இங்கிலாந்துக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.
முதல் இன்னிங்சில் 89 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்சில் 54 ஓட்டங்களும் எடுத்த ஹரி ப்ரூக் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
We set New Zealand a target of 394 runs to win the first Test.
— England Cricket (@englandcricket) February 18, 2023
Scorecard: https://t.co/dLlQqsIRFS
?? #NZvENG ??????? pic.twitter.com/jkJKmtMwJa
WHAT. A. TEAM.
— England Cricket (@englandcricket) February 19, 2023
?? #NZvENG ??????? pic.twitter.com/jnjODgwpkU