தென் ஆப்பிரிக்காவை பழிதீர்த்த இங்கிலாந்து! 85 ஓட்டங்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்தது.
மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்தது.
தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 151 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ரபாடா 36 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், பிராட் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 415 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் போஃக்ஸ் 113 ஓட்டங்களும், கேப்டன் ஸ்டோக்ஸ் 103 ஓட்டங்களும் விளாசினர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நோர்ட்ஜெ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன் பின்னர் 264 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ராபின்சன், ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் ஆகியோரின் வேகப்பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்க அணி 179 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 42 ஓட்டங்களும், வான் டெர் டுசென் 41 ஓட்டங்களும் எடுத்தனர்.
The moment we levelled the Test series! ?
— England Cricket (@englandcricket) August 27, 2022
??????? #ENGvSA ?? pic.twitter.com/FKC7QHoZ0T
இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராபின்சன் 4 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 8ஆம் திகதி ஓவலில் நடக்க உள்ளது.