உலகக்கோப்பை நாயகன் ஒருநாள் போட்டிக்கு திரும்ப வேண்டும்: இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர்
ஒருநாள் உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியை வலுப்படுத்த பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்ப வேண்டும் என பயிற்சியாளர் மேத்யூ மோட் விருப்பம் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை நாயகன் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரரான பென் ஸ்டோக்ஸ் இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த ஸ்டோக்ஸ், நடந்து முடிந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அரைசதம் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
@AP
பாகிஸ்தானுக்கு எதிரான அந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் சாம் கரன் ஆட்டநாயகன் விருதை பெற்றாலும், துடுப்பாட்டத்தில் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஸ்டோக்ஸ் உலகக்கோப்பை நாயகனாக மாறினார்.
ஒருநாள் உலகக்கோப்பைக்கு ஆயத்தம்
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் மேத்யூ மோட், ஒருநாள் கிரிக்கெட்டிற்கு ஸ்டோக்ஸ் திரும்ப வேண்டும் என்பது தனது விருப்பம் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவது குறித்து அவர் என்னிடம் பேசியபோது, நான் முதலில் கூறியது என்னவென்றால், அவர் எடுக்கும் எந்த ஒரு முடிவையும் நான் ஆதரிக்கிறேன். ஆனால் நான் அவரிடம் கூறினேன், நீங்கள் ஓய்வு பெற வேண்டிய அவசியமில்லை என்று. நான் அவரை இன்று மறுபரிசீலனை செய்ய கூறினேன்.
அவர் தனது சொந்த முடிவுகளை எடுப்பார். ஆங்கில கிரிக்கெட்டுக்கு சரியானத்தைச் செய்ய அவர் எப்போதும் இருப்பார். அது அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவின் ஒரு பகுதியாகும். இங்கிலாந்தின் முழு அமைப்புக்கும் சிறந்ததை நாங்கள் விரும்புகிறோம்.
(@PA) (@PA Wire)
இது ஒரு உலகக்கோப்பை ஆண்டாக இருக்கப்போகிறது, நாங்கள் சிறிது காலத்திற்கு டி20 கிரிக்கெட்டை அதிகம் விளையாட மாட்டோம், ஆனால் அது அவரைப் பொறுத்தது. எவ்வளவு அதிகமாக அவரைப் பெற முடியுமோ அவ்வளவு பெரியது. அவர் டெஸ்ட் கேப்டன்சியுடன் அற்புதமான வேலையைச் செய்கிறார். ஆனால் அவர் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு வரும் போது பெரிய சக்கரமாக இருப்பார்.
அசாதாரண விடயங்களை செய்யக்கூடிய நிறைய வீரர்கள் எங்களிடம் இருப்பதாக நான் நினைக்கிறேன், ஆனால் அப்படி ஒரு வீரர் தான் ஸ்டோக்ஸ் என்பது உங்களுக்கு தெரியும். அவர் இருந்தால் வெற்றி பெற முடியும்' என தெரிவித்துள்ளார்.
@REUTERS
மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடுவதால் பணிச்சுமை அதிகமாக இருப்பதாக கூறி ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
31 வயதாகும் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.