வெறுமனே கூல்டிரிங்ஸ் தூக்கிட்டு ஓடமுடியாது! இன்று ஐபிஎல் ஏலம் நடக்கவுள்ள நிலையில் அதிரடியாக விலகிய பிரபல வீரர்
2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று நடக்கவுள்ள நிலையில் முக்கிய வீரர் ஒருவர் ஏலத்தில் இருந்து விலகினார்.
இந்த ஐபிஎல் ஏலத்தில் இன்று மொத்தம் 291 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். 1000க்கும் அதிகமான வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்தாலும் இதில் 291 வீரர்களின் பெயர்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
முதலில் 292 வீரர்களின் பெயர்கள் இதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் கடைசியில் மார்க் வுட் ஐபிஎல்லில் இருந்து விலகிவிட்டதால் அவரின் பெயர் நீக்கப்பட்டு இருக்கிறது. ஏலத்தில் என் பெயரை சேர்க்க வேண்டாம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
நேற்று மாலைதான் மார்க் வுட் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். மார்க் வுட் இங்கிலாந்து அணியை சேர்ந்த மூத்த வீரர் ஆவார். இவர் 2018ல் சிஎஸ்கே அணியில் ஆடினார் . ஆனால் அப்போது அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. நல்ல பவுலராக இவர் இருந்தாலும் இவருக்கு சிஎஸ்கே அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. பெரும்பாலும் இவர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார். அல்லது கூல் டிரிங்ஸ் தூக்க வைக்கப்பட்டார்.
இதனால் இந்த வருட சீசனில் அவர் கலந்துகொள்ளவில்லை. வயதாகிவிட்டது, விருப்பம் இல்லை, இங்கிலாந்து அணிக்கான ஆட்டத்தில் கவனம் செலுத்த போகிறேன் என்று இவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் காரணமாக அவர் பெயர் நீக்கப்பட்டள்ளதாக தெரியவந்துள்ளது.