தன்பாலின பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம்! பிரித்தானிய நட்சத்திரம் வெளியிட்ட அறிவிப்பு
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீராங்கனையான டேனியல் வியாட் தனது தோழியுடன் திருமண நிச்சயம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
தன்பாலின ஜோடி
நடச்சத்திர கிரிக்கெட் வீராங்கனையான டேனியல் வியாட், 102 ஒருநாள் போட்டிகள் மற்றும் 143 டி20 போட்டிகளில் விளையாடியவர்.
இவரது தோழி ஜார்ஜ் ஹாட்ஜ், லண்டனில் உள்ள மகளிர் கால்பந்து குழுவான CAA Base-யின் தலைவராக உள்ளார். இவர்கள் இருவரும் திருமண நிச்சயம் செய்துள்ளதாக தங்கள் பதிவுகளில் குறிப்பால் உணர்த்தியுள்ளனர்.
@AFP
சமூக வலைதள பதிவு
டேனியல் வியாட் வெளியிட்ட பதிவில் 'என்றென்றும் என்னவள்' என குறிப்பிட்டு மோதிர எமோஜியை பகிர்ந்துள்ளார். அத்துடன் புகைப்படத்தில் தனது தோழியை அவர் முத்தமிடுகிறார்.
Mine forever ??❤️ pic.twitter.com/cal3fyfsEs
— Danielle Wyatt (@Danni_Wyatt) March 2, 2023
இதே பதிவை ஜார்ஜ் ஹாட்ஜும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர்களது ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, டேனியல் வியாட்டின் சக வீராங்கனைகளான நடாலி சிவெர் மற்றும் கேத்தரின் பிரண்ட் ஆகிய இருவரும் தன்பாலின காதலில் இருந்து திருமணம் செய்துகொண்டு தம்பதியாகினர். மேலும் அவர்கள் தங்கள் பெயரை தன் துணையின் பெயருடன் இணைத்து டி-ஷார்ட்டில் பதிவிட்டுக் கொண்டனர்.
@Danni_Wyatt(Twitter)
ஒருமுறை விராட் கோலி என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று வியாட் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.