நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து! துடுப்பாட்ட வீரர்களின் மிரட்டலான ஆட்டம்
நாட்டிங்காம் டெஸ்டில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி வீரர்கள் சதம் மற்றும் அரைசதங்கள் விளாசியுள்ளனர்.
டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 553 ஓட்டங்கள் குவித்தது. டேரல் மிட்செல் 190 ஓட்டங்களும், டாம் ப்ளேண்டால் 106 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தில் நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்தது. தொடக்க வீரர் ஸ்ரவ்லே 4 ஓட்டங்களில் வெளியேற, அலெக்ஸ் லீஸ் 67 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ஓலி போப் - ஜோ ரூட் இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சை புரட்டி எடுத்தனர். சிறப்பாக விளையாடி போப் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது சதத்தை விளாசினார்.
This one means a lot. An outstanding knock! ?
— England Cricket (@englandcricket) June 12, 2022
Scorecard/clips: https://t.co/GJPwJC59J7
??????? #ENGvNZ ?? | @IGcom pic.twitter.com/w9dBMnrHYy
அதிரடியில் மிரட்டிய ஜோ ரூட் 12 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்து அணி 67 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
A gorgeous shot to bring up the ? partnership between these two! ?
— England Cricket (@englandcricket) June 12, 2022
Scorecard & Videos: https://t.co/GJPwJC59J7
??????? #ENGvNZ ?? pic.twitter.com/c5L2KqUPQO