பாகிஸ்தானை வீழ்த்தி புதிய வரலாற்று படைத்த இங்கிலாந்து! வாழ்த்து கூறிய எதிரணி வீரர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று, பாகிஸ்தான் மண்ணில் புதிய வரலாறு படைத்துள்ளது.
கடைசி டெஸ்டிலும் இங்கிலாந்து வெற்றி
கராச்சியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
நான்காவது நாளில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 167 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, கடைசி நாளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.
ஏற்கனவே தொடரை வென்றிருந்த இங்கிலாந்து, இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.
@AFP
வரலாற்று சாதனை
மேலும், பாகிஸ்தானின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதன் சொந்த மண்ணிலேயே, முழுமையாக தொடரை வென்ற அணி என்ற வரலாற்று சாதனையை இங்கிலாந்து அணி படைத்தது.
இந்தப் போட்டியில் சதம் அடித்த ஒரே வீரரான இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் (111) ஆட்டநாயகன் விருதை வென்றார்.
@AP
பாகிஸ்தான் முன்னாள் கேப்டனின் வாழ்த்து
வெற்றி குறித்து இங்கிலாந்து வீரர் பென் டக்கெட், 'வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. ஆரம்பம் முதல் இறுதி வரை சம்பந்தப்பட்ட அனைவரிடம் இருந்தும் நம்ப முடியாதது. என்னவொரு அணி' என ட்வீட் பதிவிட்டார்.
@AP
அதற்கு வாழ்த்து கூறும் வகையில், பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது தனது ட்விட்டர் பக்கத்தில், 'சிறப்பாக விளையாடினீர்கள் டக்கி பாய் பென் டக்கெட்' என பதிவிட்டார். அவரது வாழ்த்துக்கு டக்கெட் நன்றி தெரிவித்தார்.
சர்ஃபராஸ் அகமதுவின் டீவீட்டை பார்த்த ரசிகர்கள் மீண்டும் அவர் பாகிஸ்தானின் கேப்டனாக விளையாட வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
Well played ducky bhai @BenDuckett1 ?? https://t.co/1UNd235YsV
— Sarfaraz Ahmed (@SarfarazA_54) December 20, 2022