42 வயதில் ஐபிஎல் டி20யில் விளையாட விரும்பும் இங்கிலாந்து ஜாம்பவான்! எந்த அணி ஆர்வம் காட்டும்?
சமீபத்தில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் விளையாட ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற இங்கிலாந்து சாம்பவான்
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரரான 42 வயது ஜேம்ஸ் ஆண்டர்சன் சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 188 போட்டிகளில் விளையாடி சுமார் 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது உடற்தகுதியை சிறப்பாக வைத்துக் கொள்வதற்காக ஐபிஎல் போன்ற மற்ற தொடர்களில் விளையாடுவதை ஜேம்ஸ் ஆண்டர்சன் தவிர்த்து வந்தார்.
கைகள் கட்டப்பட்டு சாலையில் வீசப்பட்ட பெல்ஜியம் நாட்டு இளம்பெண்: சுதந்திர தினத்தன்று நேர்ந்த பயங்கரம்!
ஆண்டர்சன் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்த நிலையில், தற்போது டி20 தொடர்களில் விளையாட ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன்
இது குறித்து அவர் தெரிவித்துள்ள தகவலில், தன்னால் இன்னும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும், இதனால் எந்த டி20 தொடர்களில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும் அதில் நான் பங்கேற்பேன்.
டெஸ்ட் கிரிக்கெட் என்ன செய்ய முடியும் என்று எனக்கு தெரியும், அதை வெள்ளை பந்திலும் செய்ய முடியுமா என்பதை பார்க்க வேண்டும்? இதுவரை டி20 தொடரில் விளையாடியது இல்லை.
என்னால் இன்னும் வேகமாக ஓடி வந்து பந்து வீச முடியும், என்னுடைய அனுபவம் நிச்சியமாக எந்தவொரு அணிக்கும் பக்கபலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
2025 ஐபிஎல் மெகா ஏலம் இந்தாண்டு நடைபெற்ற உள்ள நிலையில், இதில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு பங்கேற்கும் பட்சத்தில், மூத்த வீரர்கள் மீது கவனம் செலுத்தும் சிஎஸ்கே நிர்வாகம் அவரை வாங்க முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |