அந்தரத்தில் பறந்து கேட்ச்..ஸ்பைடர்வுமனாக மாறிய வீராங்கனை! மிரட்டலான வீடியோ
தென் ஆப்பிரிக்க எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வீராங்கனை டம்மி பியூமான்ட் பிடித்த கேட்ச் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
டவுடோனின் கூப்பர் அஸோசியேட்ஸ் கவுண்டி மைதானத்தில் இங்கிலாந்து மகளிர் அணி - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 284 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக மரிசன்னே கப் 150 ஓட்டங்கள் விளாசினார்.
அவர் லாரென் பெல்லின் ஓவரில் அடித்த பந்தை, இங்கிலாந்து வீராங்கனை டம்மி பியூமான்ட் அந்தரத்தில் பறந்து அட்டகாசமாக கேட்ச் செய்தார்.
A fine catch to end a special innings.
— England Cricket (@englandcricket) June 27, 2022
Scorecard & Videos: https://t.co/j2vpS7MUpb
??????? #ENGvSA ?? pic.twitter.com/yGZH6w7jRZ
ஸ்பைடர்வுமன் போல் அவர் பிடித்த கேட்சை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து போயினர். மரிசன்னேவின் விக்கெட் இங்கிலாந்து அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.
PC: Kieran McManus/Shutterstock
PC: Ryan Hiscott/Getty Images