உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு! அதிரடி வீரருக்கு இடமில்லை
மோசமான துடுப்பாட்டத்தினால் கழற்றிவிடப்பட்ட ஜேசன் ராய்
சாம் கரன், பில் சால்ட்டுக்கு உலகக் கோப்பை அணியில் இடம்
உலகக் கோப்பை டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் உலகக் கோப்பை டி20 தொடர் தொடங்க உள்ளது.
அக்டோபர் 16ஆம் திகதி இந்தத் தொடர் தொடங்கி நவம்பர் 13ஆம் திகதி வரை நடக்க உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்துள்ளது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்த அணியின் தொடக்க வீரரான ஜேசன் ராய் இடம்பெறவில்லை.
PC: Getty
கடைசியாக அவர் விளையாடிய 6 போட்டிகளில் 78 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தார். ராய்க்கு பதிலாக சால்ட் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, டேவிட் மாலன், சாம் கரன், லிவிங்ஸ்டன் ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சுக்கு டேவிட் வில்லே, டாப்லே, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஜோர்டன் ஆகியோர் உள்ளனர்.
அணி விபரம்: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், டேவிட் மாலன், லிவிங்ஸ்டன், சாம் கரன், டேவிட் வில்லே, டாப்லே, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஜோர்டன், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், அடில் ரஷித், பில் சால்ட்
PC: Reuters