இங்கிலாந்து அணிக்கு 190 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா: மழையால் போட்டி ரத்து
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி மழை குறுக்கீடு காரணமாக முடிவு இல்லாமல் கைவிடப்பட்டுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதல்
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று முதல் டி20 போட்டியில் விளையாடியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 1 ஓட்டத்தில் வெளியேறி அதிர்ச்சி தந்தார். ஆனால் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 59 ஓட்டங்கள் குவித்தார்.
அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 47 பந்துகளில் 68 ஓட்டங்கள் குவித்தார்.
கடைசி நேர அதிரடியை காட்டிய சிவம் தூபே 21 பந்துகளில் 42 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்கள் குவித்து இலக்கை நிர்ணயித்தது.

மழையால் போட்டி ரத்து
190 ஓட்டங்கள் இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டது.
இறுதிவரை மழையின் குறுக்கீடு குறையாததால் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |