மொத்தம் 6 விக்கெட்...இந்தியாவின் வெற்றி கனவை தட்டிப் பறித்த ஒற்றை இங்கிலாந்து வீரர்: அசத்தல் வீடியோ!
இங்கிலாந்து பந்துவீச்சாளர் ரீஸ் டோப்லி, ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்து சாதனை படைத்ததுடன், இந்திய அணியை 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்த பெரும் பங்காற்றியுள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே, முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 246 ஓட்டங்கள் குவித்தது.
இங்கிலாந்து அணியின் இலக்கை அடையமுடியாத இந்திய அணி, 38.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 146 ஓட்டங்கள் மட்டுமே குவித்து தோல்வியை தழுவியது.
All six of Topley's wickets ?
— England Cricket (@englandcricket) July 14, 2022
Full highlights: https://t.co/2n15D9KEmB
??????? #ENGvIND ?? pic.twitter.com/5yR9uez6OM
இந்தநிலையில், இங்கிலாந்து அணி பெற்ற இந்த 100 ஓட்டங்கள் வித்தியாசங்கள் கொண்ட அபார வெற்றியில், இந்திய அணியின் முண்ணனி பேட்ஸ்மேன் முதல் இறுதி பேட்ஸ்மேன் வரை அனைவரது விக்கெட்களையும் கைப்பற்றி சாதனை படைத்த இளம் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ரீஸ் டோப்லி(Reece Topley)-வின் பங்கு மிக முக்கியமானது.
247 என்ற இலக்கை துரத்தி களத்தில் வெற்றி பெற களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், சமி, சாஹல் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் விக்கெட்களை அடுத்தடுத்து களத்தில் இருந்து வெளியேற்றினார்.
28 வயதே ஆன ரீஸ் டோப்லி, இந்திய அணியுடனான தனது ஆட்டத்தில் 6 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் தனது வாழ்நாளின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார். ரீஸ் டோப்லி 9.5 பந்துகள் வீசி வெறும் 24 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கெடுத்து மொத்தம் 6 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...இந்திய அணியை கலங்கடித்து இங்கிலாந்து அணி அபார வெற்றி!
இந்தநிலையில் ரீஸ் டோப்லி-வின் இத்தகைய தலைசிறந்த பந்துவீச்சை கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் இன்னாள் வீரர்கள் வாழ்த்தி வருகின்றனர்.