ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய இங்கிலாந்து வீராங்கனைகள் - வைரல் வீடியோ
மகளிர் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீராங்கனைகள் அட்டகாசமாக ஃபீல்டிங் செய்து அசத்தினர்.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 19வது லீக் போட்டியில் நியூசிலாந்து- இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசியது. அதன்படி பேட் செய்த நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மேடி கிரீன் 52 ரன்கள் விளாச அந்த அணி 48.5 ஓவர்கள் முடிவில் 203 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து அணியில் சிவேர் 61 ரன்கள் குவிக்க 47.2 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டி 1 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இதனிடையே இந்த போட்டியில் இங்கிலாந்து வீராங்கனைகள் ஃபீல்டிங் சூப்பராக இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஆட்டத்தில் நியூசிலாந்து வீராங்கனை டிவைன் அடித்த பந்தை பவுண்டரி லைனில் இங்கிலாந்து வீராங்கனை நீச்சல் அடிப்பது போன்று சென்று தடுக்க முயன்ற போல சிறப்பான சம்பவங்களை இங்கிலாந்து நிகழ்த்தியது.
We’re actually paying a subscription for this dross!@SkyCricket can you please start showing some proper cricket?#WomensWorldCup2022 pic.twitter.com/yKgr9dKaEP
— The Victoria Cricket Club ? (@ClubEmley) March 19, 2022