Eng vs SL 2nd Test Day 2: போராடிய கமிந்து மெண்டிஸ்., 196 ஓட்டங்களில் சுருண்ட இலங்கை
இங்கிலாந்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இலங்கை அணி இங்கிலாந்தின் ஆதிக்கத்தை சமநிலைப்படுத்த முடியாமல் திணறியது.
இங்கிலாந்து முதலாம் இன்னிங்சில் 427 ஓட்டங்களைப் பதிவு செய்து, இலங்கை அணிக்கு மிகப்பாரிய இலக்கை நிர்ணயித்தது.
ஆனால் இலங்கை அணி 196 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க, கமிந்து மெண்டிஸ் சிறப்பாக விளையாடி 74 ஓட்டங்கள் குவித்தார்.
ஆனால், மற்ற வீரர்களிடமிருந்து உரிய ஆதரவு கிடைக்கவில்லை. மற்றவர்கள் 23 ஓட்டங்களைக் கூட கடக்கவில்லை.
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் பகிர்ந்து எடுத்தனர்.
மேத்யூ பாட்ட்ஸ் 11 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பாக விளையாடினார். மேலும், அனுபவம் வாய்ந்த கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளை எடுத்து இலங்கை வீரர்களை கட்டுக்குள் வைத்தார்.
கணிசமான முன்னிலை மற்றும் போதுமான நேரம் மீதமிருந்த போதிலும், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஒல்லி போப், Follow-on கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தார்.
இது முக்கியமான தீர்மானமாகவும், நீண்டகால இலக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Eng vs SL 2nd Test Day 2 match, Sri Lanka england test