வாஷ்அவுட் ஆன மேற்கிந்திய தீவுகள்! சாதனை அரைசதம் விளாசிய கேப்டன்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் பர்மிங்காமில் நடந்தது.
மேற்கிந்திய தீவுகள் முதலில் இன்னிங்சில் 282 ஓட்டங்களும், இங்கிலாந்து 376 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் 175 ஓட்டங்களுக்கு சுருண்டது. மார்க் வுட் 5 விக்கெட்டுகளும் அட்கின்சன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Middle stump ? pic.twitter.com/y7miSB6CfC
— England Cricket (@englandcricket) July 28, 2024
82 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், பென் ஸ்டோக்ஸ் ருத்ர தாண்டவம் ஆடினார். 24 பந்துகளில் அரைசதம் விளாசிய அவர், டெஸ்ட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த 4வது வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.
அணியின் ஸ்கோர் 81 ஆக உயர்ந்தபோது ஸ்டோக்ஸ் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். 28 பந்துகளை எதிர்கொண்ட பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் குவித்தார். பென் டக்கெட் (Ben Duckett) 16 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
Simply ridiculous batting from Ben Stokes ??? pic.twitter.com/KbVFLJlNO2
— England Cricket (@englandcricket) July 28, 2024
இதன்மூலம் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் வென்று மேற்கிந்திய தீவுகளை வாஷ்அவுட் செய்தது.
ஆட்டநாயகன் விருதை மார்க் வுட்டும், தொடர் நாயகன் விருதை ஜேடன் சீல்ஸ் மற்றும் கஸ் அட்கின்சனும் பெற்றனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |