மூன்று நாளில் முடிந்த டெஸ்ட்! தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து..தட்டித் தூக்கிய பென் ஸ்டோக்ஸ்
மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் ராபின்சன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்
தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா தொடர் நாயகன் விருதை வென்றார்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது. லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 118 ஓட்டங்களிலும், இங்கிலாந்து அணி 158 ஓட்டங்களிலும் முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆகின.
Ben Stokes takes our one wicket before lunch. pic.twitter.com/2jRe00prMQ
— England Cricket (@englandcricket) September 11, 2022
இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 169 ஓட்டங்களுக்கு சுருண்டது. கேப்டன் எல்கர் அதிகபட்சமாக 36 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பிராட் தலா 3 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் மற்றும் ராபின்சன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
PC: Getty Images / LINDSEY PARNABY
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜக் கிரவ்லே 69 ஓட்டங்களும், அலெக்ஸ் லீஸ் 39 ஓட்டங்களும் எடுத்தனர்.
PC: AFP
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பென் ஸ்டோக்ஸ் அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
England win The Oval Test and take the series 2-1 ?#ENGvSA | #WTC23 | https://t.co/N8y2Vli6yb pic.twitter.com/QWcPSI9OEh
— ICC (@ICC) September 12, 2022