சொந்த மண்ணில் மரண அடி வாங்கிய பாகிஸ்தான்! ருத்ர தாண்டவம் ஆடிய வீரர்கள்..தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்
இந்த தொடரில் 238 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்தின் ஹேரி ப்ரூக் தொடர் நாயகன் விருதை வென்றார்
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து அணி 4-3 என்ற கணக்கில் கைப்பற்றியது. லாகூரில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதி டி20 போட்டி நடந்தது.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணியில் சால்ட் (20), ஹால்ஸ் (18) ஆட்டமிழந்த நிலையில், டக்கெட் அதிரடியாக 19 பந்துகளில் 30 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
பின்னர் கைகோர்த்த டேவிட் மாலன், ஹேரி ப்ரூக் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இறுதிவரை இருவரும் களத்தில் நிற்க, இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்கள் குவித்தது.
மாலன் 47 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்களும், ப்ரூக் 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 46 ஓட்டங்களும் விளாசினர். பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
We have set Pakistan a target of 210 in the final match of the series ????????
— England Cricket (@englandcricket) October 2, 2022
Scorecard: https://t.co/XgfOFyyZsK
??#PAKvENG ??????? pic.twitter.com/yJyWj9PESy
ஷான் மசூட் மட்டும் ஒருபுறம் போராட, ஏனைய வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.
கடைசி வரை போராடிய மசூட் 43 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Second T20I fifty for @shani_official ✅#PAKvENG | #UKSePK pic.twitter.com/dzRg0lTeab
— Pakistan Cricket (@TheRealPCB) October 2, 2022
இந்த வெற்றியின் மூலம் 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி டி20 தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் டிசம்பர் 1ஆம் திகதி தொடங்குகிறது.
A big series win to start a massive winter for our T20 team ?
— England Cricket (@englandcricket) October 2, 2022
??#PAKvENG ??????? pic.twitter.com/sqJjgyllSh