பரபரப்பான கடைசி நாள் ஆட்டம்! 17 ஆண்டுகளுக்கு பின்.. சொந்த மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து
ராவல்பிண்டியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் டெஸ்ட்
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளு க்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 657 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்சில் 264 ஓட்டங்களும் எடுத்தது.
பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 579 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் 343 வெற்றி இலக்குடன் களமிறங்கிய அந்த அணி, 4வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 80 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இன்று தொடங்கிய கடைசி நாள் ஆட்டத்தில் இமாம் உல் ஹக் 48 ஓட்டங்களிலும், ரிஸ்வான் 46 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். போராடிய ஷகீல் அதன் பின்னர் நங்கூரமாக நிலைத்து நின்று ஆடிய ஷகீல் 76 (159) ஓட்டங்களில் ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
A patient fifty from Saud Shakeel has kept Pakistan on track.#WTC23 | #PAKvENG | https://t.co/PRCGXi3dZS pic.twitter.com/IlHeCsJiMs
— ICC (@ICC) December 5, 2022
அக்ஹ சல்மான் 30 ஓட்டங்களில் வெளியேற, அஸார் அலி, ஜஹித் மஹ்மூத் மற்றும் ஹரிஸ் ராஃப் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் கடைசி விக்கெட்டுக்கு நின்ற நசீம் ஷா மற்றும் முகமது அலி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.
An unbeaten 80-run stand between Shakeel and Rizwan has boosted Pakistan’s run-chase.#WTC23 | #PAKvENG | https://t.co/PRCGXi3dZS pic.twitter.com/ADKpuflsW4
— ICC (@ICC) December 5, 2022
செக் வைத்த ஜேக் லீச்
அவர்கள் ஓட்டங்கள் எடுக்க முயற்சிக்காமல் டிரா செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆண்டர்சன், ராபின்சன், ஸ்டோக்சின் பந்துவீச்சுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் லீச் பந்துவீச்சில் எல்.பி.டபுள்.யூ முறையில் நசீம் ஷா ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து 17 ஆண்டுகளுக்கு பின் வெற்றியை எட்டியுள்ளது. மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்தின் ராபின்சன் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
Pakistan are seven down!#WTC23 | #PAKvENG | https://t.co/PRCGXi3dZS pic.twitter.com/bAjMWs0D3v
— ICC (@ICC) December 5, 2022
Only the third Test victory for England in Pakistan ?#WTC23 | #PAKvENG | https://t.co/PRCGXi3dZS pic.twitter.com/0K9EB0oSE4
— ICC (@ICC) December 5, 2022