பாகிஸ்தான் மண்ணில் வரலாறு படைத்த இங்கிலாந்து! 17 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது
முல்தானில் நடந்த டெஸ்ட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ராவல்பிண்டியில் நடந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் கடந்த 9ஆம் திகதி தொடங்கியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 281 ஓட்டங்களும், பாகிஸ்தான் அணி 202 ஓட்டங்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 275 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 108 ஓட்டங்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் அணிக்கு 353 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷஃபிக் 45 ஓட்டங்களும், முகமது ரிஸ்வான் 30 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
Enterprising cameo from debutant Abrar Ahmed ?#PAKvENG | #UKSePK pic.twitter.com/llfBWahOry
— Pakistan Cricket (@TheRealPCB) December 12, 2022
பின்னர் களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் ஒரு ரன்னில் வெளியேறினார். இமாம் உல் ஹக் 60 ஓட்டங்களில் லீச் பந்துவீச்சில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து அஷ்ரப் (10) ஆட்டமிழக்க, முகமது நவாஸ் 45 ஓட்டங்கள் எடுத்தார்.
@ICC
ஷகீல் பொறுப்பான ஆட்டம்
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடிய ஷகீல் 94 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனால் அவர் முதல் சதத்தை தவறவிட்டார். கடைசி விக்கெட்டாக முகமது அலி (0) ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 328 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
@ICC
இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளும், ராபின்சன் மற்றும் ஆண்டர்சன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
@ICC
தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
இதன்மூலம் இங்கிலாந்து அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. ஹாரி ப்ரூக் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
@ICC
@ICC