Euro 2024: இங்கிலாந்தை டிரா செய்த டென்மார்க்..மிரள வைத்த வீரர்
யூரோ 2024 தொடரின் இங்கிலாந்து, டென்மார்க் அணிகள் மோதிய போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
ஹாரி கேன் கோல்
Deutsche Bank Park மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகள் மோதின.
பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியில் இங்கிலாந்து (England) நட்சத்திரம் ஹாரி கேன் (Harry Kane) 18வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்தார்.
அதற்கு பதிலடியாக டென்மார்க் (Denmark) இளம் வீரர் மோர்டென் ஹூல்மண்ட் (Morten Hjulmand), 34வது நிமிடத்தில் கிக் செய்த பந்து வீரர்களுக்குள் புகுந்து சென்று, கோல் கம்பத்தில் பட்டு வலைக்குள் புகுந்தது.
டிராவில் முடிந்த போட்டி
இதன்மூலம் முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் இங்கிலாந்து வீரர்களின் கோல் முயற்சிகளை, டென்மார்க் கோல் கீப்பர் மிரட்டலாக தடுத்தார்.
மேற்கொண்டு இருதரப்பிலும் கோல் விழாததால் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
Hjulmand stunner cancels out Kane strike...
— UEFA EURO 2024 (@EURO2024) June 20, 2024
Match report ?️⬇️#EURO2024 | #DENENG
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |