இங்கிலாந்தை ஒட்டு மொத்தமாக கதற விட்ட இந்தியா! ஆண்டர்சன் ஸ்டம்ப்கை தெறிக்க பும்ரா வீடியோ
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 183 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தோல்விக்கு பின், இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக, இந்திய அணி, அங்கே இருந்து வந்தது.
இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று டிரண்ட் பிரிட்ஜில் துவங்கியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆனால், இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை முதல் ஓவரிலே காலி செய்தார் பும்ரா. துவக்க வீரரான ராரி ஜோசப் பர்ன்ஸை டக் அவுட் ஆக்கி வெளியேற்ற. அதைத் தொடர்ந்து வந்த டாம் சிப்ளி 18 ஓட்டங்களும், ஜாக் கிராவ்ளி 27 ஓட்டங்களும் என வீரர்கள் வந்த வேகத்தில் பவுலியன் திரும்ப, தனி ஒருவனாக ஜோ ரூட் மட்டும் இந்தியாவின் பந்து வீச்சை சமாளித்து ஆடினார்.
ENGLAND HAS BEEN BOWLED OUT FOR 183!! ☝?
— Sony Sports (@SonySportsIndia) August 4, 2021
This time there is no leg in between ?
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! ?#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #JaspritBumrah pic.twitter.com/r3ztimhB6a
ஆனால், அவரும் 64 ஓட்டங்கள் எடுத்த நிலையில், சாகூல் தாகூரின் துல்லியமான பந்து வீச்சில் அவுட்டாக, இங்கிலாந்து அணி இறுதியாக முதல் இன்னிங்ஸில் 183 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஜஸ்பிரிட் பும்ரா நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டினார். குறிப்பாக இங்கிலாந்து அணியின் கடைசி விக்கெட்டான ஜேம்ஸ் ஆண்டசர்னை தன்னுடைய துல்லியமான யார்க்கர் மூலம் போல்டாக்கி வெளியேற்றினார்.
அதன் பின் ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் தலா 9 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.