இங்கிலாந்திற்கு பயத்தை காட்டிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்: போராடிய அட்கின்ஸன்
England team allout for 290 runs at lord's ground: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 290 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
லண்டன் லார்ட்'ஸில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் 290 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
நெருக்கடி கொடுத்த அப்பாஸ்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

துடுப்பாட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணியில் எமிலியோ கே 8 ஓட்டங்களிலும், பென் டக்கெட் 17 ஓட்டங்களிலும் மொஹம்மது அப்பாஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த அணித்தலைவர் ஜோ ரூட் 4 ஓட்டங்களில் அப்பாஸின் பந்துவீசில் lbw ஆகி வெளியேறினார். புரூக் (15), டென் லாரன்ஸ் (17) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
கோக்ஸ் அரைசதம்
நிதானமாக ஆடிய ஜோர்டன் கோக்ஸ் 55 ஓட்டங்கள் எடுக்க, அதிரடி காட்டிய ஜேமி ஸ்மித் (Jamie Smith) 80 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கஸ் அட்கின்ஸன் 45 (46) ஓட்டங்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 290 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஜோஷ் டங் 30 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். மொஹம்மது அப்பாஸ் (Mohammad Abbas) 4 விக்கெட்டுகளும், மொஹம்மது அலி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |