இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜாம்பவான் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஜாம்பவான் டிம் பிரஸ்னன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
36 வயதான டிம் இங்கிலாந்து சர்வதேச அணிக்காக மொத்தமாக 142 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் வரலாற்று சிறப்புவாய்ந்த 2010/2011 ஆஷஸ் தொடரில் விளையாடியிருக்கிறார்.
டிம் 2001ஆம் ஆண்டு முதல் 2019 வரையில் யார்க்ஷயர் கவுண்டி அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
இந்த நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். இது ஒரு கடினமான முடிவாகும், ஆனால் குளிர்காலப் பயிற்சிக்குத் திரும்பிய பிறகு ஓய்வுக்கு இதுவே சரியான நேரம் என்று உணர்கிறேன்.
நான் விரும்பும் கிரிக்கெட் விளையாட்டின் மீது உள்ள எனது ஆர்வம் என்றுமே மாறாது.
நான் என் சொந்த நாட்டு அணிக்காக விளையாடியதை என்றுமே பெருமையுடன் நினைத்து கொள்வேன் என கூறியுள்ளார்.