ஜோஸ் பட்லர் தலைமையில் இந்தியாவை எதிர்கொள்ளும் இங்கிலாந்து: முழு அணி விபரம்
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து மோதல்
இந்தியாவில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தொடர்களுக்கும் ஜோஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் டி20 போட்டி ஜனவரி 22-ம் திகதி தொடங்க உள்ளது. இந்த தொடர், விரைவில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கான ஒரு முக்கியமான பயிற்சியாக இரண்டு அணிகளுக்கும் இருக்கும்.
Our squads for 🏏
— England Cricket (@englandcricket) December 22, 2024
India ODI series ☑
India T20 series ☑
Champions Trophy ☑
Click for more 👇
இங்கிலாந்து அணி விவரம்
ஜோஸ் பட்லர் (கேப்டன்), கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி சுமித், லியாம் லிவிங்ஸ்டன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், ஜோ ரூட், சாகிப் மக்மூத், பில் சால்ட், மார்க் வுட்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |