பிரித்தானியாவில் இதற்கு முழுமையாக தடை விதிக்க திட்டம்: மாற்று வழியை தேடிக்கொள்ளும்படி அறிவுறுத்தல்

England UK News Plastic Ban Single Use Plastics
By Ragavan Nov 20, 2021 12:53 PM GMT
Report

இங்கிலாந்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டுகள், கட்லரி மற்றும் போலிஸ்டரின் பொருட்கள் முழுமையாக தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசாங்கம் தவிர்க்கக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முயல்வதால், இங்கிலாந்தில் யூஸ் அண்டு த்ரோ பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் தடை செய்யப்படலாம் என கூறியுள்ளது.

இங்கிலாந்தில் ஆண்டுக்கு 1.1 பில்லியன் ஒற்றை பயன்பாட்டு (Single Use) தட்டுகளும், 4.25 பில்லியன் கட்லரி பொருட்களும் பயன்படுத்தப்படுகிறது.

அவற்றில் பெரும்பாலானவை பிளாஸ்டிக் ஆகும். ஆனால் அவற்றில் 10 சதவீதம் மட்டுமே அப்புறப்படுத்தப்பட்டவுடன் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், 12 வார பொது ஆலோசனையில் முன்மொழிவுகளின் கீழ், வணிகங்கள் மற்றும் நுகர்வோர் இந்த பொருட்களுக்கு நிலையான மாற்று பொருட்களை நோக்கி நகர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், Wet wipes, சிகரெட் ஃபில்டர், பொட்டலங்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிற கோப்பைகள் போன்ற பிளாஸ்டிக் பொருள்களையும் எதிர்காலத்தில் தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இதற்கு முழுமையாக தடை விதிக்க திட்டம்: மாற்று வழியை தேடிக்கொள்ளும்படி அறிவுறுத்தல் | England Ban Single Use Plastic Plates Cutlery UkPhoto:  Milkos/Dreamstime

"பிளாஸ்டிக்களால் நமது சுற்றுச்சூழலுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை பேக்கேஜிங்கில் பயன்படுத்துவதைக் குறைக்கவும், குப்பை கொட்டும் பொருட்களில் அதன் பயன்பாட்டை தடை செய்யவும் விரும்புகிறோம்" என்று சுற்றுச்சூழல் அமைச்சர் ஜார்ஜ் யூஸ்டிஸ் கூறினார்.

மேலும் "நாங்கள் ஏற்கனவே பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள், கிளறிகள் மற்றும் காட்டன் மொட்டுகளுக்கு (Buds) தடை விதித்துள்ளோம், இப்போது மரம் போன்ற மாற்று பொருட்களைப் பயன்படுத்தக்கூடிய கட்லரி கருவிகள் மற்றும் பலூன் குச்சிகளுக்கு தடையை நீட்டிக்க திட்டமிட்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.

2015 முதல் முக்கிய பல்பொருள் அங்காடிகளில் Single-use carrier bags-க்கான கட்டாயக் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அதன் பயன்பாடு 95% குறைந்துள்ளது.

ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தின் பகிர்ந்தளிக்கப்பட்ட நிர்வாகங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் மீதான தங்கள் சொந்த கொள்கைகளுக்கு பொறுப்பாகும். 

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US