156 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டிய இலங்கை
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 156 ரன்கள் எடுத்துள்ளது.
பெங்களூருவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அந்த அணியின் 1st ஆட்டக்காரர்களான ஜானி பேர்ஸ்டோ, தாவீத் மலான் ஆகியோர் விளையாடியதில் பேர்ஸ்டோ 30 ரன்னிலும், மலான் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களத்திற்கு வந்த ஜோ ரூட், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் குறைந்த ரன்னில் ஆட்டமிழந்தனர்.
மேலும் மொயின் அலி 15 ரன்னிலும், வோக்ஸ் 0 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 33.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.
இலங்கை அணியின் லஹிரு குமரா 3 விக்கெட்டுகளையும், மேத்யூஸ், ரஜிதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |