இரண்டு தொடர்களில் ஒரு வெற்றி கூட இல்லை: இங்கிலாந்தில் ஒயிட்வாஷான மேற்கிந்திய தீவுகள்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது.
ஜேமி ஸ்மித் ருத்ர தாண்டவம்
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய டி20 போட்டி சௌதாம்டானில் நேற்று நடந்தது.
From outside leg, over cover 😅
— England Cricket (@englandcricket) June 10, 2025
That's some reverse sweep 👌@BenDuckett1 | #ENGvWI pic.twitter.com/51jjRxxWMT

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேமி ஸ்மித் ருத்ர தாண்டவம் ஆடினார். 26 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் விளாசினார்.
அடுத்து வந்த பட்லர் 22 (10) ஓட்டங்களில் ரூதர்போர்டு ஓவரில் ஆட்டமிழந்தார். அதிரடி அரைசதம் விளாசிய பென் டக்கெட் (Ben Duckett) 46 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்கள் குவித்தார்.
ஜேக்கப் பெத்தெல் சரவெடி
அணித்தலைவர் ஹாரி புரூக் 22 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்களும், ஜேக்கப் பெத்தெல் 16 பந்துகளில் 4 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 36 ஓட்டங்கள் விளாசினர்.
இதன்மூலம் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 248 ஓட்டங்கள் குவித்தது. அகேல் ஹொசைன், ரூதர்போர்டு மற்றும் மோட்டி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
Incredible hitting! 🏏💥🙌
— England Cricket (@englandcricket) June 10, 2025
Catch up on the action so far! 📽
Click below 👇
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த நிலையில், சரவெடி காட்டிய ஷிம்ரான் ஹெட்மையர் 8 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 26 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் வந்த ரூதர்போர்டு 1 ரன்னில் வெளியேற, அணித்தலைவர் ஷாய் ஹோப் (Shai Hope) 27 பந்துகளில் 45 ஓட்டங்கள் குவித்தார்.
தனியாளாக போராடிய ரோவ்மான் பௌல்
அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரோவ்மான் பௌல் தனியாளாக வெற்றிக்காக போராடினார்.
எனினும், மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர்களில் 211 ஓட்டங்கள் எடுத்து 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
கடைசிவரை களத்தில் நின்ற ரோவ்மான் பௌல் (Rovman Powell) 45 பந்துகளில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 79 ஓட்டங்கள் விளாசினார். ஜேசன் ஹோல்டர் 12 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 25 ஓட்டங்கள் எடுத்தார். லுக் வுட் 3 விக்கெட்டுகளும், அடில் ரஷீத் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. முன்னதாக ஒருநாள் தொடரையும் கைப்பற்றியதால் மேற்கிந்திய தீவுகள் அணி ஒயிட்வாஷ் ஆனது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |