குறைக்கப்பட்ட ஓவர்கள்... நமீபியாவை மொத்தமாக சுருட்டிய இங்கிலாந்து
டி20 உலகக்கிண்ணம் தொடரில் மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் நமீபியாவை எளிதாக வென்றுள்ளது இங்கிலாந்து அணி.
ஆட்டம் 10 ஓவர்களாக
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு மழை போக்கு காட்டியது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
தொடர்ந்து நாணய சுழற்சியில் வென்ற நமீபிய அணி பந்துவீச்சை தெரிவுசெய்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. இந்த நிலையில் மீண்டும் சிறிது நேரம் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
தொடக்கம் முதலே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பேர்ஸ்டோ (31), ஹாரி புரூக் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தாலும், மொயீன் அலி மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரின் சில சிக்சர்களாலும் இங்கிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்கள் குவித்தது.
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது
நமீபியா தரப்பில் ட்ரம்பல்மன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து டி.எல். விதிப்படி 126 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நமீபியா அணி சார்பாக மைக்கேல் வான் லிங்கன் மற்றும் நிகோ டேவின் ஜோடி களமிறங்கியது.
இதில் 29 பந்துகளை எதிர்கொண்ட லிங்கன் 33 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டேவிட் வைஸ் 12 பந்துகளில் 27 ஓட்டங்கள் குவித்தார்.
இதனிடையே காயம் காரணமாக டேவின் வெளியேற 10 ஓவர்கள் முடிவில் நமீபியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 84 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 41 ஓட்டங்களுக்கு வெற்றி பெற்றதுடன் சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |