மகளிர் உலகக்கிண்ணம்: தென் ஆப்பிரிக்காவை நொறுக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து
மகளிர் உலகக்கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
நட் சிவர்-ப்ரண்ட் 75 ஓட்டங்கள்
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மகளிர் உலகக்கிண்ண இரண்டாவது அரையிறுதிப் போட்டி கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் எடுத்தது. நட் சிவர்-ப்ரண்ட் (Nat Sciver-Brunt) 47 பந்துகளில் 75 ஓட்டங்களும், ஹெதர் நைட் 47 பந்துகளில் 58 ஓட்டங்கள் விளாசினர்.

ஷாப்மின் இஸ்மைல், லாபா தலா 2 விக்கெட்டுகளும், மரிசன்னே கப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து வெற்றி
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
டஸ்மின் பிரிட்ஸ் (Tazmin Brits) 45 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்தார். லாரென் பெல், சார்லோட் டீன் தலா 2 விக்கெட்டுகளும், லின்சே ஸ்மித், எக்லெஸ்டோன் மற்றும் கெம்ப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, ஜூலை 5ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |