DLS முறையில் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து அணி: அதிர்ச்சி கொடுத்த சாம் கர்ரன்
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மெண்டிஸ், நிசங்கா
பல்லேகேலேவில் நடந்த டி20 போட்டியில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின. மழை குறுக்கிட்டதால் 17 ஓவர்கள் போட்டியாக குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய இலங்கை அணி 16.2 ஓவர்களில் 133 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

குசால் மெண்டிஸ் 20 பந்துகளில் 37 ஓட்டங்களும், பதும் நிசங்கா 23 ஓட்டங்களும், தசுன் ஷானகா 20 ஓட்டங்களும் விளாசினர்.
இங்கிலாந்து வெற்றி
சாம் கர்ரன், அடில் ரஷீத் தலா 3 விக்கெட்டுகளும், ஜேமி ஓவர்டன் மற்றும் லியாம் டாவ்ஸன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பிலிப் சால்ட் (Philip Salt) 46 ஓட்டங்களும், டாம் பேன்டன் 29 ஓட்டங்களும் விளாசினர். எஷன் மலிங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |