இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து; பவன் ரத்நாயக்கவின் சதம் வீண்
england beat sri lanka by 55 runs: பவன் ரத்நாயக்க சதமடித்தும் இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில், இலங்கை 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து
இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடர், பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
நேற்று, லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 386 ஓட்டங்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் அதிரடியாக ஆடி, 132 பந்துகளில் 23 பவுண்டரிகள் உட்பட 167 ஓட்டங்கள் குவித்தார்.

387 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 45.1 ஓவர்கள் முடிவில் 331 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

இலங்கை தரப்பில், அதிகபட்சமாக பவன் ரத்நாயக்க 118 ஓட்டங்களும், குஷால் மெண்டிஸ் 89 ஓட்டங்களும் குவித்தனர்.
பவன் ரத்நாயக்கவின் சதம் வீண்
இதன் மூலம், 2026 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் பவன் ரத்நாயக்க இடம் பிடித்துள்ளார். சுப்மன் கில், பென் டக்கட் மற்றும் பவன் ரத்நாயக்க ஆகிய மூவரும் தலா 3 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து தரப்பில், லியாம் டாசன் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

புள்ளிப்பட்டியலின்படி, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் 2 இடங்களை பிடித்து ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டன.
இங்கிலாந்து அணி இந்த போட்டியில், 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.