ஜிம்பாப்பேயை மொத்தமாக முடித்த பஷிர்! இங்கிலாந்து அணி இமாலய வெற்றி
நாட்டிங்காம் டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்பேயை வீழ்த்தியது.
ஜிம்பாப்பே ஃபாலோ ஆன்
ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்பே அணிகள் மோதின.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 565 ஓட்டங்கள் குவிக்க, ஜிம்பாப்பே 265 ஓட்டங்களே எடுத்ததால் ஃபாலோ ஆன் ஆனது.
அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்பே அணியில், சியான் வில்லியம்ஸ் மற்றும் சிக்கந்தர் ரஸா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
An absolute beauty from Bashir! 😍 pic.twitter.com/AFzIQkHoDL
— England Cricket (@englandcricket) May 23, 2025
மிரட்டிய பஷிர்
ஆனால், ஷோயிப் பஷிரின் மிரட்டலான பந்துவீச்சில் ஏனைய வீரர்கள் ஆட்டமிழந்ததால், ஜிம்பாப்பே 255 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இதன்மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
சியான் வில்லியம்ஸ் (Sean Williams) 82 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்களும், சிக்கந்தர் ரஸா (Sikandar Raza) 68 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்களும் விளாசினர். அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷோயிப் பஷிர் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |