டி20யில் 304 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து! 141 ஓட்டங்கள் விளாசிய வீரர்..அதிர்ந்த கிரிக்கெட் உலகம்

England Cricket Team South Africa National Cricket Team
By Sivaraj Sep 13, 2025 05:20 AM GMT
Report

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 304 ஓட்டங்கள் குவித்து, 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

வாணவேடிக்கை

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி மான்செஸ்டரில் நடந்தது. Philip Salt/Jos Buttler

அதிரடி அரைசதம் விளாசல்! ஓமன் அணியை தெறிக்கவிட்ட பாகிஸ்தான் வீரர்

அதிரடி அரைசதம் விளாசல்! ஓமன் அணியை தெறிக்கவிட்ட பாகிஸ்தான் வீரர்

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் வாணவேடிக்கை காட்டினர்.

அதிரடி அரைசதம் விளாசிய ஜோஸ் பட்லர் 30 பந்துகளில் 7 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 83 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பிலிப் சால்ட் சதம்

இந்த கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 47 பந்துகளில் 126 ஓட்டங்கள் சேர்த்தது. பிலிப் சால்ட் (Philip Salt) 39 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். சிக்ஸர் பவுண்டரிகள் அவர் ஒருபுறம் பறக்கவிட, பெத்தேல் 26 (14) ஓட்டங்களில் வெளியேறினார். Philip Salt

பின்னர் வந்த ஹாரி புரூக் அதிரடி காட்ட இங்கிலாந்து 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ஓட்டங்கள் குவித்தது.

இதன்மூலம் Full member அணிக்கு எதிராக 300 ஓட்டங்கள் அடித்த முதல் அணி எனும் வரலாற்று சாதனை படைத்ததுடன், டி20யில் தங்களது அதிகபட்ச ஸ்கோரையும் இங்கிலாந்து பதிவு செய்தது.

மேலும், ஒட்டுமொத்த அரங்கில் 300 ஓட்டங்கள் குவித்த மூன்றாவது அணி இங்கிலாந்து ஆகும். இதற்கு முன் ஜிம்பாப்பே 344 ஓட்டங்களும், நேபாளம் 314 ஓட்டங்களும் குவித்திருந்தன. 

இமாலய வெற்றி

பிலிப் சால்ட் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 141 ஓட்டங்கள் விளாசினார். இதில் 8 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடங்கும். ஹாரி புரூக் 21 பந்துகளில் 41 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 158 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, இங்கிலாந்து 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக மார்க்ரம் 41 (20) ஓட்டங்களும், போர்டுன் 32 (16) ஓட்டங்களும் எடுத்தனர். ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், சாம் கர்ரன், டாவ்சன் மற்றும் வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். Jofra Archer/South Africa Cricket 

Jofra Archer

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US