உண்மையாவே வெறுப்பாக இருக்கு! நாங்க இப்படி செஞ்சிருக்கனும்... வெற்றியை நோக்கி சென்று தோற்று போன விரக்தியில் பேசிய ஜோ ரூட்
ஓவல் டெஸ்டில் இங்கிலாந்தை பலரும் எதிர்பாராத வகையில் துவம்சம் செய்து இந்தியா வெற்றி பெற்ற நிலையில் தோல்வி குறித்து இங்கிலாந்து கேட்பன் ஜோ ரூட் பேசியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவலில் நடந்த நிலையில் இந்தியா அபார வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்று முன்னிலை பெற்றது.
இப்போட்டியின் 5ஆம் நாள் யாரும் எதிர்பாராத வகையில் டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் கொண்டிருந்தது என கூறினால் அது மிகையாகாது!.. வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து வீறுநடை போட்ட நிலையில் திடீரென இந்திய பவுலர்கள் விஸ்வரூபம் எடுத்து இங்கிலாந்தை தோற்கடித்தனர்.
தோல்விக்கு பின்னர் பேசிய கேப்டன் ஜோ ரூட், உண்மையில் வெறுப்பாகவே இருக்கிறது. வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவே நினைத்தோம். ஆனால் இந்தியாவுக்கு பாராட்டுக்கள். பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்தனர், இதுதான் திருப்பு முனை.
முதல் இன்னிங்ஸ் முன்னிலையிலிருந்து வெற்றி பெற்றிருக்க வேண்டும். வாய்ப்புகளை உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக ஆடும் போது பயன்படுத்த வேண்டும்.
ரிவர்ஸ் ஸ்விங்கை இன்னும் கொஞ்சம் சிறப்பாகக் கையாண்டிருக்க வேண்டும். எதார்த்த உணர்வுடன் ஆட வேண்டும், உண்மை இதுதான், இது தான் தோல்விக்கு காரணம் என பேசியுள்ளார்.