கத்தார் உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு காத்திருக்கும் மாபெரும் சவால்: வெல்லுமா?
கத்தார் உலகக் கோப்பையில் அமெரிக்க அணியிடம் சொதப்பிய நிலையில், இரண்டாவது சுற்றில் இங்கிலாந்து அணிக்கு மாபெரும் சவால் காத்திருப்பதாக கூறுகின்றனர்.
சிதறடித்த இங்கிலாந்து அணி
கத்தார் உலகக் கோப்பையில் ஈரான் அணியை 6-2 என்ற கோல் கணக்கில் சிதறடித்த இங்கிலாந்து அணி, தனது இரண்டாவது ஆட்டத்தில் சொதப்பியதுடன் அமெரிக்கா அணியுடன் கோல் அடிக்க முடியாமல் திணறியது.
@getty
இதனால் இரு அணிகளும் ஆட்டத்தை சமநிலையில் முடித்துள்ளது. இந்த நிலையில், இரண்டாவது சுற்றில் இங்கிலாந்து அணி நெதர்லாந்தை எதிர்கொள்ளும் என்றே உறுதியாகியுள்ளது.
பி பிரிவில் முதலிடத்தை இங்கிலாந்து அணி தக்கவைக்க வேண்டும் எனில், வேல்ஸ் அணியுடன் சமநிலை பெற்றாலே போதும். வேல்ஸ் அணியுடன் வெற்றியை பதிவு செய்தால் சிக்கல் இல்லை என்றாலும், இரண்டாவது சுற்றில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்வது தான் இங்கிலாந்து அணிக்கு மாபெரும் சவாலாக இருக்கும் என கூறுகின்றனர்.
மாபெரும் சவாலாக இருக்கும்
நெதர்லாந்து அணி அவர்களின் பிரிவில் முதலிடத்தில் உள்ளனர். இனி கத்தாருடன் மட்டுமே அவர்கள் மோத வேண்டியுள்ளது. கத்தார் அணியை பொறுத்தமட்டில் அவர்களின் முதல் இரு போட்டிகளிலும் தோல்வியை பதிவு செய்துள்ளனர்.
@reuters
இதனிடையே, செனகல் அணியை எதிர்கொள்ளவிருக்கும் ஈக்வடார் அணி நெதர்லாந்தின் இடத்தை கைப்பற்ற முயற்சிக்கும்.
நெதர்லாந்து அணியுடனான சமீபத்திய போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி பரிதாபமாக தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.