பிரித்தானியாவில் தொடர்ந்து லொட்டரி சீட்டு வாங்கியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. ஒரே இரவில் பல கோடிகளை அள்ளிய தம்பதி
இங்கிலாந்தில் பெண் ஒருவர் லொட்டரி சீட்டு வாங்கியது மூலம் ஒரே இரவில் கோடிஸ்வரராக மாறியுள்ளது அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு ஒரே லொட்டரி சீட்டு மூலம் பல கோடிகள் பரிசாக விழுந்துள்ளது. Ben என்பவருக்கு Omaze நிறுவனத்தில் அடிக்கடி லொட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்துள்ளது.
இதற்கு முன் Ben பல லொட்டரி சீட்டு வாங்கி இருந்தாலும் அவருக்கு ஒரு ரூபாய் கூட பரிசாக கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மனைவி Becca, தனது கணவனுக்கு தெரியாமல் Omaze நிறுவனத்தில் முதல் முறையாக 1000 ரூபாய் கொடுத்து ஒரு லொட்டரி டிக்கெட் ஒன்று வாங்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் வாங்கிய சீட்டிற்கு சுமார் 35 கோடி மதிப்புள்ள பங்களா ஒன்று பரிசாக விழுந்துள்ளது. வெறும் 1000 ரூபாய் கொடுத்து வாங்கிய லொட்டரியில் ₹35 கோடி மதிப்புள்ள 2 படுக்கை அறை கொண்ட பிளாட்டில் இருந்து நேரடியாக பங்களா ஒன்று கிடைத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து Becca கூறியதாவது, எனது கணவர் Omaze நிறுவனத்தில் லொட்டரி சீட்டி வாங்குவது வழக்கம். ஆனால் இதுவரை அவருக்கு இதன்மூலம் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை.
இதனால் அவருக்கு தெரியாமல் நான் லொட்டரி சீட்டு வாங்கினேன். ஆனால் இப்படி ஒரு அதிர்ஷ்டம் எனக்கு கிடைக்கும் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என்று சந்தோஷத்தின் உச்சத்தில் உள்ள Becca தெரிவித்துள்ளார்.