கோலியின் பாரம்பரியத்தை இதுபோன்ற தருணங்கள் தான் வரையறுக்கும்! களத்தில் அவர்... மனதில் இருப்பதை பேசிய கெவின் பீட்டர்சன்
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் என இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, களத்தில் இறங்கிவிட்டாலே, வீரர்களை உற்காசப்படுத்துவது, விக்கெட் விழுந்தால் குதிப்பது, பாராட்டுவது என உற்சாகப்படுத்துவார்.
எந்த அளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கிறார் எனத் தெரிகிறது. கோலியின் இந்தச் செயல்கள் களத்தில் மிகவும் அதீதமாகத் தெரிந்தாலும், செயற்கையாகப் பலருக்குத் தெரிந்தாலும், உண்மையில் கிரிக்கெட் மீதான நேசம், ஈர்ப்பு ஆகியவைதான் கோலியின் செயல்களுக்குக் காரணம்.
டெஸ்ட்டில் ஜாம்பவானாகத் தான் உருமாறுவதற்கு, டெஸ்ட் போட்டியில் மட்டுமல்ல டி20 போட்டியிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பது கோலிக்கும் தெரியும். அதனால்தான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கோலி அதிகமான முக்கியத்துவம் அளிக்கிறார்.
இங்கிலாந்து பயணம் வந்து லார்ட்ஸ் மைதானத்திலும் வெற்றி பெற்றது கோலியை மிகப்பெரிய அளவு திருப்திப்படுத்துகிறது. கோலியின் உற்சாகம், போட்டியின் மீதான தீவிரம், அணி வீரர்களை அவர் நடத்தும் விதம் ஆகியவற்றைப் பார்க்கும்போது கோலிக்கு டெஸ்ட் கிரிக்கெட்தான் எல்லாமே என நமக்குத் தெரியும்.
இதுபோன்ற தருணங்கள்தான் கோலியின் பாரம்பரியத்தை வரையறுக்கும் என புகழ்ந்துள்ளார்.
களத்தில் எதிரணி வீரர்களுடன் மோதல், ஸ்லெட்ஜிங், சேட்டைகள் போன்றவற்றைச் செய்யும் கோலி குறித்து பிரிட்டன் ஊடகங்கள் பலவாறு விமர்சித்து வரும்நிலையில் அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் கோலியை இந்தளவுக்கு பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.