ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை இங்கிலாந்து கைவிட வேண்டும்: நிராகரித்த ECB
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரும் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) நிராகரித்துள்ளது.
தலிபானின் கடுமையான பெண்கள் உரிமை தாக்குதல்கள் குறித்து அரசியல்வாதிகளிடமிருந்து அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு மத்தியிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நைஜல் ஃபாரேஜ்(Nigel Farage), ஜெரமி கார்பின்(Jeremy Corbyn), லார்ட் கின்னாக்(Lord Kinnock) போன்ற முக்கிய பிரமுகர்கள் உட்பட 160க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், லாகூரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலிருந்து ECB விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர்.
லேபர் எம்.பி டோனியா அன்டோனியாஸி(Tonia Antoniazzi) தலைமையிலான இந்த கடிதம், 2021 ஆம் ஆண்டில் தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் "வெறுக்கத்தக்க சமூக ஒடுக்குமுறையை" கடுமையாக கண்டித்துள்ளது.
அத்துடன் இத்தகைய மனித உரிமை துஷ்பிரயோகங்கள் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதை தெளிவாக தெரிவிக்க பிப்ரவரி 26 அன்று நடைபெறும் போட்டியை ECB புறக்கணிக்க வேண்டும் என்று அந்த கடிதம் வலியுறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் அமைப்புசார் விளையாட்டுகளில் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், ECB தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் கோல்ட்(Richard Gould), தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுப்பதை விட அனைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உறுப்பு நாடுகளின் ஒருங்கிணைந்த பதிலை வாரியம் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தலிபானால் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு "கடுமையாக கண்டனம்" தெரிவிக்கும் நடவடிக்கையை ஒப்புக்கொண்டாலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான எந்தவொரு போட்டியையும் ECB தனித்துவமாக திட்டமிடவில்லை என்பதை Richard Gould வலியுறுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |