இந்தியாவை விட்டு அவசரமாக வெளியேறிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி: ஏன் இந்த முடிவு?
2 -வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் இந்தியாவை விட்டு இங்கிலாந்து அணியினர் அவசரமாக வெளியேறியுள்ளனர்.
2 போட்டிகள் நிறைவு
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 2 -வது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதனால், இரு அணிகளும் 1-1 என சமனில் உள்ளது. 3 -வது டெஸ்ட் போட்டி வரும் 5 -ம் திகதி ராஜ்கோட்டில் தொடங்க உள்ளது.
இந்தியாவை விட்டு வெளியேறிய இங்கிலாந்து அணி
இந்நிலையில், 2 -வது டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்து அணி அவசரமாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளது. அதற்கான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
3 -வது டெஸ்ட் போட்டிக்கு இன்னும் 10 நாட்கள் உள்ளதால் அவர்கள் அபுதாபிக்கு சென்று அங்கு ஒரு வாரம் பயிற்சி முகாமில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்பு அபுதாபி சென்ற இங்கிலாந்து அணியினர் 2 முதல் 3 வாரங்கள் பயிற்சிகளை எடுத்த பின்பே இந்தியாவுக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |