சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் அறிவித்துள்ளார்.
கிறிஸ் வோக்ஸ்
2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு எதிரான T20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ்.
இதுவரை 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் வோக்ஸ்., 1 சதம் மற்றும் 7 அரைசதத்துடன் 2,034 ஓட்டங்கள் குவித்ததோடு, 192 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
மேலும், 122 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 6 ரைசதங்களுடன் 1,524 ஓட்டங்கள் குவித்துள்ளதோடு, 173 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
2019 ODI உலகக்கோப்பை மற்றும் 2022 T20 உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் இடம் பெற்றிருந்தார்.
மேலும், ஐபிஎல் தொடர்களில், கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
சமீபத்தில், இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோள்பட்டை காயம் காரணமாக விலகினார்.
இதனையடுத்து, அடுத்த மாதம் தொடங்க உள்ள ஆஷஸ் தொடரில் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
Pleasure has been all mine. No regrets 🏴 pic.twitter.com/kzUKsnNehy
— Chris Woakes (@chriswoakes) September 29, 2025
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அதேவேளையில், கவுண்டி கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |