இந்தியா ஜெர்சி அணிந்து வீரர்களோடு மைதானத்திற்குள் புகுந்த இங்கிலாந்து ரசிகர்! காட்டுத் தீயாய் பரவும் வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ரசிகர் ஒருவர் இந்திய ஜெர்சியில் மைதானத்திற்குள் வந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணி சற்று முன் வரை 4 விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்நிலையில், இப்போட்டியின் போது ரசிகர்கள் ஒருவர் இந்தியா அணி அணிந்திருக்கும் ஜெர்சி போன்று உடை அணிந்து வீரர்களுடன் வீரர்களாக மைதானத்திற்குள் வந்தார்.
New bowler from the Nursery End: Jarvo 69 ?
— Cricket Mate. (@CricketMate_) August 14, 2021
pic.twitter.com/ZmnldjaKU7
அப்போது இதை கவனித்த பாதுகாவலர்கள் உடனடியாக அவரைப் பிடித்து விசாரித்த போது, அவர் நான் இந்திய வீரர் தான் என்று குறிப்பிட்டு தன்னுடைய பெயரான ஜாவ்ரோ மற்றும் பிசிசிஐ சிம்பிளை காட்டுகிறார்.
இதைக் கண்ட இந்திய ரசிகர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் மைதானத்தில் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.