ஜேர்மனிக்கு செல்ல முடியாதபடி 1600 பிரித்தானியர்களின் கடவுச்சீட்டுகள் பறிமுதல்
ஜேர்மனியில் யூரோ கிண்ணம் கால்பந்து போட்டிகள் முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், 1600 இங்கிலாந்து அணி ரசிகர்களின் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடையளம் காணப்பட்ட
யூரோ கிண்ணம் 2024-ஐ கைப்பற்றும் நோக்கில் இங்கிலாந்து அணி ஜேர்மனிக்கு புறப்பட உள்ளது. 2020ல் தவறவிட்டதை 2024ல் கைப்பற்ற வேண்டும் என்ற துடிப்புடன் இங்கிலாந்து அணி உள்ளது.
ஆனால் தீவிர ரசிகர்கள் சிலர் ஜேர்மனிக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. அடையளம் காணப்பட்ட 1600 இங்கிலாந்து அணி ரசிகர்களின் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்டுள்ள இந்த 1600 பேர்கள் ஜூன் 4 முதல் தங்கள் பிரித்தானிய கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க வேண்டும். ஜூலை 14 வரையில் இந்த கடவுச்சீட்டுகள் அதிகாரிகள் வசம் இருக்கும்.
அபராதம் அல்லது சிறை
நாம் அனைவரும் கொண்டாடும் இந்த விளையாட்டில் வன்முறை, துஸ்பிரயோகம் மற்றும் ஒழுக்கமின்மைக்கு இடமில்லை என அமைச்சர் கிறிஸ் பில்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் தடை விதிப்புக்கு இணங்க மறுப்பவர்கள் அல்லது ஜேர்மனி அல்லது அதைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு பயணிக்க முயற்சிப்பவர்கள், வரம்பற்ற அபராதம் அல்லது சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |