147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில்..எந்த அணியும் செய்யாத சாதனையை படைத்த இங்கிலாந்து
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் அதிவேகமாக 50 ஓட்டங்கள் எடுத்த அணி எனும் சாதனையை இங்கிலாந்து படைத்தது.
வரலாற்று சாதனை
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, இங்கிலாந்து முதலில் துடுப்பாடியது. ஜக் கிராவ்லே டக்அவுட் ஆகி வெளியேற, பென் டக்கெட் (Ben Duckett) மற்றும் ஓலி போப் அதிரடியில் மிரட்டினர்.
இதன்மூலம் இங்கிலாந்து 4.2 ஓவரிலேயே 50 ஓட்டங்களை எட்டி அரிய சாதனை படைத்தது. 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 50 ஓட்டங்களை எட்டிய முதல் அணி இங்கிலாந்து தான்.
Back-to-back-to-back-to-back boundaries 😍
— England Cricket (@englandcricket) July 18, 2024
🔥 @BenDuckett1 pic.twitter.com/9IqzPtdwra
1994யில் 4.3 ஓவரில் இங்கிலாந்து 50 ஓட்டங்களை எட்டியிருந்தது. தற்போது சொந்த சாதனையை இங்கிலாந்து முறியடித்துள்ளது.
பென் டக்கெட் அதிரடி
அதன் பின்னர் டக்கெட் 32 பந்துகளில் அரைசதம் விளாசி, குறைந்த பந்தில் 50 ஓட்டங்கள் எட்டிய 4வது இங்கிலாந்து வீரர் எனும் பெருமையை பெற்றார்.
அவர் 71 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஓலி போப் (Ollie Pope) 6வது டெஸ்ட் சதம் அடித்தார். ஜோ ரூட் (14), ஹாரி ப்ரூக் (36) தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.
அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, போப் 121 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார். பின்னர் 69 ஓட்டங்கள் எடுத்த ஸ்டோக்ஸ் அவுட் ஆக, ஜேமி ஸ்மித் 36 ஓட்டங்களும், கிறிஸ் வோக்ஸ் 37 ஓட்டங்களும் எடுத்தனர்.
Test century: 6️⃣
— England Cricket (@englandcricket) July 18, 2024
Well done, Popey 🔥 pic.twitter.com/i0RirgYozT
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 416 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுகளும், சீல்ஸ், கெவின் சின்க்ளைர் மற்றும் கவேம் ஹாட்ஜ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Batted, skip 🫡 pic.twitter.com/zm7adHoHBI
— England Cricket (@englandcricket) July 18, 2024
All out at the end of Day 1 ✅ pic.twitter.com/JPYY4X5JVa
— England Cricket (@englandcricket) July 18, 2024
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |