வரலாற்றை மாற்றிய இங்கிலாந்து! ராவல்பிண்டியில் ரன் மழை..மிரண்டுபோன ரசிகர்கள்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் டெஸ்ட் புதிய வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது.
இங்கிலாந்து அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகிறது. ராவல்பிண்டியில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் ஒருநாள் போட்டியைப் போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 506 ஓட்டங்கள் குவித்தது. போதைய வெளிச்சம் இல்லாததால் 75 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.
இதன்மூலம் அவுஸ்திரேலியாவின் 112 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டது. 1910ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா 494 ஓட்டங்கள் எடுத்ததே முதல் நாளில் அடிக்கப்பட்ட சாதனையாக இருந்த நிலையில், இங்கிலாந்து அதனை முறியடித்தது. அத்துடன் 6.75 ரன்ரேட்டை இங்கிலாந்து முதல் நாளில் வைத்திருந்தது.
Harry Brook 5⃣0⃣
— ICC (@ICC) December 1, 2022
Ollie Pope ?
England continue to dominate ?#WTC23 | #PAKvENG | https://t.co/PRCGXi3dZS pic.twitter.com/GVlJdszn6l
சதத்தில் சாதனை
இங்கிலாந்தின் ஜக் கிராவ்லே (122), பென் டக்கெட் (107), ஓலி போப் (108), ஹாரி ப்ரூக் (153) ஆகிய துடுப்பாட்ட வீரர்கள் முதல் நாளிலேயே சதம் விளாசி சாதனை படைத்தனர். இதில் மூன்று வீரர்கள் நூறு ஸ்ட்ரைக் ரேட்டில் சதத்தை எட்டினர்.
பென் டக்கெட், ஹாரி ப்ரூக் இருவரும் தங்களது முதலாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தனர்.
Stumps in Rawalpindi ?
— ICC (@ICC) December 1, 2022
England rewrite record books on their historic return to Pakistan ? #WTC23 | #PAKvENG | https://t.co/PRCGXi3dZS pic.twitter.com/WPDooIc2ee
பார்ட்னர்ஷிப் சாதனை
ஜக் கிராவ்லே, பென் டக்கெட் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 35.4 ஓவர்களில் 233 ஓட்டங்கள் குவித்தனர். 6.53 ரன் ரேட்டில் இந்த ஸ்கோர் எடுக்கப்பட்டது புதிய சாதனை ஆகும்.
பவுண்டரி சாதனை
ஹாரி ப்ரூக் ஒரே ஓவரில் ஆறு பவுண்டரிகள் அடித்து, உலகளவில் ஆறாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் அவர் 116 பந்துகளில் 5 சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் 153 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
A sensational knock from Harry Brook comes to an end.
— ICC (@ICC) December 2, 2022
? https://t.co/PRCGXi3LPq#WTC23 | #PAKvENG pic.twitter.com/gfBdPoOkdq
முடிவுக்கு வந்த இன்னிங்ஸ்
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஒரு வழியாக இரண்டாம் நாளில் முடிவுக்கு வந்துள்ளது. ஆனாலும் பின்வரிசை வீரர்கள் ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக் கொண்டனர்.
All out for 657 before lunch on Day 2.
— England Cricket (@englandcricket) December 2, 2022
Some batting performance.
Scorecard: https://t.co/kJ1HaRNJrj
?? #PAKvENG ??????? pic.twitter.com/9TfDcm4kWz
இங்கிலாந்து அணி 101 ஓவர்களில் (606 பந்துகள்) 657 ஓட்டங்கள் குவித்துள்ளது. கேப்டன் ஸ்டோக்ஸ் 41 ஓட்டங்களும், வில் ஜேக்ஸ் 30 ஓட்டங்களும், ராபின்சன் 37 ஓட்டங்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஜாஹித் மஃக்மூத் 4 விக்கெட்டுகளும், நசீம் ஷா 3 விக்கெட்டுகளும், முகமது அலி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.