மகளிர் கால்பந்து உலக கோப்பை-2023: அவுஸ்ரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி இங்கிலாந்து கால்பந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி
மகளிர் கால்பந்து உலக கோப்பை-2023 அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வைத்து நடைபெற்று வருகிறது.
லீக் சுற்றுகள் நிறைவடைந்து தகுதி சுற்றுகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே ஆதிக்கத்தை செலுத்திய இங்கிலாந்து அணி ஆட்டத்தின் இறுதியில் 3 கோல்கள் வரை அடித்து இருந்தனர்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை எலா டூன், லாரன் ஹெம்ப் மற்றும் அலெசியா ருஸ்ஸோ ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக தலா ஒரு கோல்களை அடித்து இருந்தனர்.
கடைசி வரை போராடிய அவுஸ்திரேலிய அணியால் 1 கோல் மட்டுமே அடிக்க முடிந்தது, அவுஸ்திரேலியாவின் தரப்பில் சாம் கெர் அந்த கோலை அடித்து இருந்தார்.
இதன் மூலம் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை 1-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இறுதிப் போட்டியில் இங்கிலாந்து-ஸ்பெயின் அணிகள்
இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2023ம் ஆண்டிற்கான மகளிர் உலக கோப்பை கால்பந்தின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் 2-1 என்ற கணக்கில் சுவீடனை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் அணி முன்னேறியது.
இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதிக் கொள்ளும் 2023ம் ஆண்டிற்கான மகளிர் உலக கோப்பை கால்பந்தின் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 20ம் திகதி நடைபெற்ற உள்ளது.
ஆகஸ்ட் 19ம் திகதி 3 இடத்திற்கான போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் சுவீடன் அணிகள் மோதிக் கொள்ள உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |