யூரோ கால்பந்து! அரையிறுதி வெற்றிக்கு பின் இங்கிலாந்து வீரர் செய்த நெகிழ்ச்சி செயல்: சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
யூரோ கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்தின் வெற்றிக்கு பின் இங்கிலாந்து அணி வீரர் மேசன் மவுண்ட் , இளம் ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
யூரோ கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகள் மோதின. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இதை ஓட்டு மொத்த இங்கிலாந்து ரசிகர்கள் கொண்டாடி வருவதுடம், இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்று சில பிரார்த்தனை கூட செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்போட்டியின் வெற்றிக்கு பின் இங்கிலாந்து அணி வீரரான Mason Mount ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். லண்டனில் இருக்கும் விம்ளி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றதால், இங்கிலாந்து ரசிகர்கள் ஏராளமானோர் இருந்தனர்.
This is just… ?
— England (@England) July 8, 2021
Lovely touch, @masonmount_10 ❤️pic.twitter.com/0A6vuHCcch
அப்போது திடீரென்று போட்டி முடிந்த பின்பு, ரசிகர்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்த Mason Mount, அங்கிருந்த இளம் ரசிகைக்கு, தன்னுடைய டீ சர்ட்டை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த சிறுமி, அந்த டீ சர்ட்டை வாங்கி, அதன் பின் தன் தந்தையாரை கட்டிப் பிடித்து, ஆனந்த கண்ணீர் விட்டார், இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.