யூரோ 2020: ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து., யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?
தற்போது நடைபெற்றுவரும் EURO 2020 உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் எந்த நாட்டிற்கு வெற்றிவாகை சுடுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 11-ஆம் திகதி தொடங்கியா யூரோ கோப்பை கால்பந்து தொடர் தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இறுதிக்கட்ட போட்டிகளுக்கு செல்ல அணிகள், இன்னும் பல போட்டிகள் விளையாட வேண்டியுள்ளன.
இன்று ஸ்பெயின் மற்றும் போலந்து இடையே தற்போது போட்டி நடைபெற்றுவரவுகிறது. மேலும், இத்தாலி-வேல்ஸ் இடையிலும், சுவிற்சர்லாந்து-துருக்கி இடையிலான 2 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், போட்டியில் பங்கேற்றுள்ள 24 நாடுகளில் எந்த அணி EURO 2020 உலகக்கோப்பையை வெல்லும் என்று இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவில் பெற்றுள்ள புள்ளிகளின் அடிப்படையில், OptaJoe வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் செயல்திறன் கணிப்பு மாதிரியின்படி கணிக்கப்பட்டுள்ளது.
OptaJoe-வின் புள்ளிவிவரங்கள் செயல்திறன் கணிப்பு மாதிரியின்படி, 23.3% வாய்ப்புடன் யூரோ 2020 ஐ வெல்ல பிரான்ஸ் பிடித்த (Favorite) அணியாக உள்ளது. அதனனைத் தொடர்ந்து 12.2% வாய்ப்புடன் ஜேர்மனி இப்போது இரண்டாவது பிடித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து போர்ச்சுகல் 10.6% வாய்ப்புடன் மூன்றாவது இடத்தையும், ஸ்பெயின் 10.2% வாய்ப்புடன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.
அதேபோல், வடக்கு மாசிடோனியா 0% வாய்ப்புடன் பட்டியலிலிருந்து முதலில் வெளியேறுகிறது. துருக்கி, ஹங்கேரி மற்றும் ஸ்காட்லாந்து 0.5% வாய்ப்புகள் கூட இல்லாமல் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.